SILAII Stories
சென்னையில் வைக்கப்பட்ட அண்ணாவின் முதல் சிலை! - பிடிவாதம் பிடித்த எம்.ஜி.ஆர்
அண்ணா என எழுதத் துவங்கினால், அவர் பெயருக்கு முன்னால் அறிஞர் என கைகள் தானாக எழுதச் செல்லும். அண்ணா என நினைத்தால், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், வாஞ்சையோடு அவர் தம்பிகளுக்கு எழுதிய கடிதம், தமிழக அரசியலின் அச்சாணியாய் அவர் செய்கைகள் நினைவுக்கு வரும். அவருடைய உருவத்தை நினைத்தால் நம் கண்களுக்கு முதலில் இரண்டு உருவங்கள் நினைவுக்கு வரும். அவர் பெயர் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தின் முன் அமைதியாய் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும் உருவமும், இந்த நிலத்தின் தலைநகரத்தின் முக்கியச் சாலையில் நடுநாயகமாய் கைகளைத் தூக்கிநிற்கும் அந்தச் சிலையும் நினைவுக்கு வரும். Read More...